Athiban Appalam/Papad
நமது பாரம்பரியமான உணவுப் பொருட்களை அதன் உண்மையான ருசி, மணம், மற்றும் சத்துக்களுடன் அப்படியே மீட்டெடுக்க வேண்டும் என்ற பெரும் விருப்பம் மற்றும் ஆசையால் உருவாக்கப்பட்டது iTrust Food Factory. நாங்கள் முதலில் அப்பளத்தை தேர்ந்தெடுத்தோம். அப்பளம் சுமார் 100 வருடங்களுக்கும் மேலான பாரம்பரிய உணவுப்பொருள் என்பது நிச்சயம். அப்பளம் செய்வதில் புகழ்பெற்ற கல்லிடைக்குறிச்சியில் சன்னதித்தெரு, தங்கம்மாள்புரம், வைத்தியபுரம், வீரபுரம் மற்றும் பல ஊர்களில் பாரம்பரியமாய் வீடுகளில் தங்கள் தேவைக்கு மட்டும் அப்பளம் செய்து கொள்பவர்களில் அனுபவமிக்க பெரியவர்களிடம் ருசிமிக்க உண்மையான அப்பளம் செய்யும் நுட்பங்களை கேட்டறிந்தோம். அதேபோல் மதுரை, சென்னையில் அப்பளம் செய்வதில் அனுபவமிக்க தொழில் கலைஞர்களிடம் , நேர்த்தியான அப்பள தயாரிப்பு பற்றி கேட்டறிந்தோம். இறுதியில் 94 வயது ராஜம் என்கிற அம்மையாரை சந்தித்தோம். மிக வசதியான குடும்ப சூழலில் கல்லிடைக்குறிச்சியில் பிறந்து மதுரையில் வாழ்க்கைப்பட்டவர். அவர் கூறிய அப்பளம் தயாரிக்கும் மிக நுட்பமான செய்முறைகள் எங்கள் அப்பளம் தயாரிக்கும் கனவை கச்சிதமாய் நிறைவேற்றும் என்று அறிந்தோம